Wednesday, October 1, 2008

ஹர்பஜன் சிங்க் Vs ரிக்கி பாண்டிங்

இந்த தொடர்ல ரொம்ப எதிர்பார்க்கபடற tussle ஹர்பஜன் சிங்கோட பவுலிங்க ரிக்கி பாண்டிங் எப்படி விளையாடுவாருன்னு தான்.


ஒரு பத்து பன்னண்டு வருஷம் முன்னாடி ஆஸ்திரேலியாவோட அப்கமிங் பேட்ஸ்மேனா கிரேக் ப்ளுவெட் (Greg Blewett !) இருந்தாரு. இவரோட strokes எல்லாம் பாக்கறதுக்கு பயங்கர ஸ்டைலிஷா இருக்கும் . ஆனா பாவம் MUSHTAQ AHMED போடற கூக்லிய சுத்தமா பிக் பண்ண தெரியாம தெனருவாறு. பேட்ட தூக்கிகிட்டு கால வச்சி குச்சிய மறைச்சிகிட்டு கும்மி அடிப்பாரு. ஆனா பந்து நேரா போய் குச்சிய பேத்துடும்.


ஒரு மேட்ச்ல லுஞ்சுக்கு ஒரு ஓவர் இருக்கும். Blewett Batting. உடனே முஷ்ட்டாக் பந்த தூக்கிட்டு வருவாரு. (பவுலர் எல்லாருமே ப்ரீயா கிடைச்சா பினாயில் குடிக்கற கூட்டம்.)


பஸ்ட் பால் - blewett கூக்லி எதிர்பார்த்து விளையாடுவாரு. ஆனா proper leg break வரும். எப்படியோ சமாளிச்சுடுவாரு.


செகண்ட் பால் - கூக்லி தான் - இதோட கோவிந்தானு Blewettoda புட் வொர்க் இருக்கும். ஆனா again proper leg break.


மூணாவது பால் - நீ என்னடா நாயே கூக்லி போடறதுன்னு லெக் பிரேக்லயே ஸ்லிப் கேட்ச் கொடுத்து பன்னு சாப்பிட எல்லாரையும் அழைச்சிகிட்டு பெவிலியன் போய்டுவாரு.


அந்த சீரியஸ் முடிஞ்ச உடன அவருக்கு பதிலா தான் ரிக்கி பாண்டிங் டீமுக்கு வந்தாரு.


பெங்களூர்ல பாண்டிங் செட் தோசா சாப்பிட எல்லாரையும் அழைச்சிக்கிட்டு பெவிலியன் திரும்புவாரா ? (இல்லாட்டி ஏற்கனவே 2001ல ப்ரீ லஞ்ச் நெறைய கொடுத்துட்டேன்னு விட்டுடுவாரா) .

அக்டோபர் ஒம்பதாம் தேதியோ இல்லாட்டி பத்தாம் தேதியோ பதில் தெரியும். பாக்கலாம்.

2 comments:

Anonymous said...

Mani, kalakura Mani...namma rooma-la moolaila paduthukitu pesara maathiriyae ezhuthi iruka. Aaana Gleg Blewet-ku avaru ivarungara alavukku mariyathai konjam jaasti...nee room-la eppadi pesuviyo, appadi ezhuthu

மணிகண்டன் said...

இத பிரசுரிக்கரதுக்கு முன்னாடி Blewettkku அனுப்பினேன். அவன் பதில் அனுப்பல. அதுனால தான் கொஞ்சம் safe'aa இருக்கட்டும்ன்னு மரியாதை கொடுத்து இருக்கேன். திடீர்னு Billion Dollar litigation போட்டுட்டா என்ன பண்றது ?