ஒன்றிரண்டு மாற்றங்களை தவிர மொஹாலியில் விளையாடிய அதே டீம் தான் டெல்லியிலும். மற்றபடி, சாப்பல் (இயன்) கூறுவது போல் அணித்தலைவர் தொடருக்கு நடுவில் மாற்றப்படுவது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு தேவையற்ற டிஷ்ட்ராக்க்ஷன் தவிர்க்கபட்டதாகவே நினைக்கிறேன். இந்த போட்டியில் தொடரை கைப்பற்றுவது சவுரவுக்கு இந்திய அணி தரும் பிட்டிங் ட்ரிப்யூட். அப்படி நடந்தால் இதுவே அவரது கடைசி போட்டியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
ஆஸ்திரேலியா நிச்சயமாக ஒரு நல்ல சுழல்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். மாத்யூ ஹய்டேன் சென்ற டெஸ்ட்டில் திடீர் என்று அடித்து விளையாடியது ஜாகிர்கானை கவுண்டர் செய்ய கையாளப்பட்ட முறைன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காரு. அதே மாதிரியே திருப்பியும் விளையாடனும்ன்னு வேண்டுவோம்.
இந்திய பிட்ச்ல முதல் ரெண்டு நாளைக்கு தான் ஸ்பின்னர்ஸ் அருமையா போடறாங்க. பிட்சும் ஹெல்ப் பண்ணும். அதுக்கு அப்புறம் ரொம்ப பிட்ச் ரொம்ப மெதுவா ஆயிடும். சோ, டாஸ் ரொம்ப பெரிய ரோல் எல்லாம் ப்லே பண்ணாது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், நாக்பூர் மற்றும் ஒரு மும்பை ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் (கிறிஸ்துமஸ் பண்டிகை அவர்கள் ஊரில் கொண்டாட) விளையாடுவதை நிராகரித்து இருக்கிறது.
Monday, October 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment