ஆஸ்திரேலியா டீம் ரொம்பவே வீக்ன்னு மீடியால ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவங்க நம்ப பசங்கள evaluate பண்ண மறந்துட்டாங்க. பாண்டிங் இந்தியால முதல்முறையா செஞ்சுரி அடிச்சி இருக்காரு. முதல் ஒவேர்லயே ஹய்டேன் அவுட் ஆனது பாண்டிங்கோட லக் தான். இன்ஷான்ட் ஷர்மா ரொம்ப நல்லா பௌலிங் போடறான். இந்த மேட்ச்ல மெயின் disappointment கும்ப்ளே தான். அவர் ஸ்ரீலங்கால சோபிக்கல. அதே மாதிரி இங்கயும். முப்பேத்தேழு வயசுல அவருக்கு form ரீகைன் பண்ண சான்ஸ் கிடைக்குமானு தெரியல. அத தவிர ஏதோ தோல்பட்டைல இஞ்சுரின்னு வேற சொல்றாங்க. அடுத்த மேட்ச் டோனி தலைவரான ஆச்சர்யம் கிடையாது. நிச்சயமா கும்ப்ளே மூணாவது மேட்ச்க்கு (டெல்லி) வந்துடுவாரு.
BCCI எதுக்கு முதல் மேட்ச் பெங்களூர்ல, இரண்டாவது மேட்ச் மொகாலில schedule பண்ணினாங்கன்னு தெரியல. கொல்கத்தா, சென்னை ரெண்டுலயும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா இந்தியாவுக்கு அட்வான்டேஜ் ஜாஸ்தி. ஆனா மேட்ச் இல்ல.
இந்த சீரியஸ் அரம்பிக்கரதுக்கு முன்னாடியே நான் இந்தியா டெல்லில, ஆஸ்திரேலியா பெங்களூர்ல நிச்சயம் ஜயிச்சுடுவாங்கன்னு நினைச்சேன். பட் நம்ப ஆளுங்க பெங்களூர்ல ட்ரா பண்ணிட்டாங்க. so, என்னைய பொறுத்தவரைக்கும் அட்வாண்டஜ் இந்தியா தான்.
ஆஸ்திரேலியா 1-0 ன்னு இருந்து இருக்கணும். ஆனா அவங்க ஏன் இந்த அளவுக்கு defensive அப்ரோச்ன்னு எனக்கு புரியல. அதுவும் பேட்டிங்ல ! ஹய்டேன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருந்தா வித்தியாசமா இருந்து இருக்கும். ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்ஸ் இன்னும் நல்லா போடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஏன்னா அவங்க கிட்ட ஒரு நல்ல ஸ்பின்னர் கூட இல்ல. இத விட பெட்டரா போடாட்டி அவங்க இந்த சீரியஸ்ல ஒரு மேட்ச் ஜெயிக்கறது கூட ரொம்ப கஷ்டம்.
எந்த ஒரு தொடர்லயும் இந்தியா கொஞ்சம் மெதுவா தான் அரம்பிக்கறாங்க. ஆனாலும் மிடில் ஆர்டர் இந்த அளவுக்கு கொடுமையா விளையாடறது எரிச்சலா இருக்கு. (எல்லாருக்கும் கொஞ்ச நேரமாவது மேட்ச் ப்ராக்டிஸ் கிடைச்சி இருக்கு) அத தவிர டோனியும் திராபையா விளையாடறாரு. பட் இந்திய டீம் inconsistent அப்படிங்கறது ஒரு புது செய்தி கிடையாது. அதுனால, பேட்ஸ்மேன் நிச்சயமா அடுத்த ரெண்டு மூணு மேட்ச்ல ஒரு மேட்ச் டாமினேட் பண்ணுவாங்க. ஆனா, இந்த சீரியஸ் முடியறதுக்குள்ள பத்ரிநாத், ரோஹித் ஷர்மாவுக்கு சான்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும். முநாப் படேலுக்கும் சான்ஸ் கொடுக்கணும். பாக்கலாம்.
(ஒரு மேட்ச் முடிஞ்ச உடன அதுக்கு one-sided + reasonable கண்ணோட்டம் கொடுக்கிறது எப்படின்னு முயற்சி பண்ணி பாத்தேன்.)
Monday, October 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment