Tuesday, September 30, 2008

ஜெயதேவ் ஷா - இந்திய/திருச்சி கிரிக்கெட் சங்க அரசியல்

இஸ்ரேலுக்கு போன இந்திய அணிக்கு தலைவனா போய் ஜெயிச்சுட்டு வந்துருக்காரு. போன வருஷம் சௌராஷ்ட்ர அணிக்கு தலைவனா இருந்து ரஞ்சி ஒன் டே போட்டில சாம்பியன்ஷிப் ஜெயிச்சு இருக்காரு. ரொம்ப அருமையா அணிய கையாண்டார்ன்னு பெரிய பெரிய பருப்பு எல்லாம் பாராட்டி இருக்காங்க. கடந்த ஆறு வருஷத்துல பஸ்ட் கிளாஸ் போட்டிகள ரெண்டு முறை செஞ்சுரி அடிச்சி இருக்காரு. 10 விக்கெட் எடுத்து இருக்காரு. (ஒரே மேட்ச்ல இல்ல - 37 மேட்ச்ல).


இவை அத்தனையும் மனசுல கொண்டு இந்திய A அணிக்கு உதவி தலைவனா நியமிக்கப்பட்டு இருக்காரு. அவருக்கு நம்பளோட வாழ்த்துக்கள சொல்லுவோம்.


(ஜெயதேவ் ஷா - நிரஞ்சன் ஷாவோட பையன் )


94 ன்னு நினைக்கறேன். திருச்சில நடக்கிற கிரிக்கெட் மேட்ச் எல்லாம் நான் பாத்துகிட்டு இருந்த காலம். அப்பதான் நான் அம்பயர் பரீட்சை பாஸ் பண்ணி இருந்தேன். அதுனால சங்கத்துல உள்ள மக்கள் எல்லாம் நல்ல பரிச்சயம். அத தவிர நம்ப நண்பர்கள் எல்லாம் திருச்சி அண்டர் 19 கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. திருச்சியோட கோச் நாகின்னு ஒருத்தரு.(செலக்டரும் கூட ) கேப்டன் ஸ்ரீராம். நல்லா பேட் பண்ணுவான். அத தவிர நாகி சொல்றத செய்வான். அந்த வருஷம் போட்டிக்கு கோயம்புத்தூர் போனாங்க. திருச்சிக்கு ஒரு இடது கை ச்பின்னர், ஒரு ரெண்டு பூச்சி பாஸ்ட் பவுலர். அத தவிர, வேணுன்னு ஒரு நல்ல வேகமா ஓடி வந்து கைய சுத்தி/சுத்தி போடற ஒரு பாஸ்ட் பவுலர். இவனுங்க மாட்ச்ல விக்கெட் எடுக்கரத பத்தி நான் பேசி பாத்ததே கிடையாது. எவ்வளவு அல்வா கொடுத்தோம்ன்னு தான் கவுண்டு பண்ணுவாங்க. ( அல்வா - பேட்ஸ்மண் மூஞ்சிலயோ உடம்புலயோ ரத்தம் பாக்குறது.). அந்த வருஷம் திருச்சி லீக்ல ஒரு 35 விக்கெட் எடுத்து இருந்ததுனால அவன் தான் ஸ்டிரைக் பவுலர். எல்லாரும் பஸ்ல கோயம்புத்தூர் போய்கிட்டு இருக்கும் போது


நாகி :- ஏண்டா செந்திலா, வேணு எதுக்குடா ஹெல்மெட் எடுத்துக்கிட்டு வரான் ?

செந்தில் :- இல்ல சார். அவன் பௌலிங் போடற போது, shortleg பீல்டருக்கு.

நாகி :- ஓஹோ அப்படியா.


டாஸ் தோத்து போய்டாங்கன்னு நினைக்கறேன். கோயம்புத்தூர் பேட்டிங். வேணு ஹெட் பேண்ட் எல்லாம் போட்டுக்கிட்டு பௌலிங் ஸ்டெப்ஸ் மார்க் பண்ணிக்கிட்டு இருக்கான்.


ஆனா பஸ்ட் ஓவர் செந்தில். அந்த ஓவர் முடிஞ்சவுடன நாகிகிட்டேந்து ஸ்ரீராமுக்கு அழைப்பு. அடுத்த ஓவர் மரியராஸ். அதுக்க அடுத்த ஓவர் செந்தில் .........


ஒன் கட் பௌலிங் இடது கை ஸ்பின்னர். போட போட சாத்து விழுது.
ட்ரிங்க்ஸ் வருது. நாகி வேணுவ பாத்து ஒரு நக்கல் சிரிப்பு.

ட்ரிங்க்ஸ் முடிஞ்ச உடன, திருப்பி அதே பவுலர். மறுபடியும் சாத்து.


மேட்ச் 45 ஓவர்ஸ் தான். 41 ஆவது ஓவர் வருது. கோயம்புத்தூர்ல ஒரு பேட்ஸ்மண் 95 ரன் எடுத்து விளையாடிகிட்டு இருக்கான். ஸ்ரீராம் வேணு கிட்ட பந்த கொடுக்கறான். 40 ஓவர்ஸ் கழிச்சி மறுபடியும் பவுண்டரி பக்கத்துல போய் ஸ்டெப்ஸ் மார்க் பண்றான். அடியோ அடின்னு அடிச்சு இருக்கறதுனால நோ க்ளோஸ் பீல்டர்ஸ். டீசண்டா போடறான். நாலு பால்ல ஒரே ஒரு ரன் தான். 95 ரன் எடுத்த பேட்ஸ்மண் அஞ்சாவது பால்ல அவுட்.


அடுத்த ஓவர் மரியராஸ். ஓவர் முடிஞ்சவுடன பந்த எடுத்துக்கிட்டு வேணு வரான். நாகிகிட்டேந்து ஸ்ரீராமுக்கு மறுபடியும் அழைப்பு. வேணுகிட்டேந்து பந்த வாங்கி இடது கை ஸ்பின்னர் கிட்ட கொடுக்கறான். மறுபடியும் சாத்து. இன்னிங்க்ஸ் முடியுது.


வேணு ஸ்ரீராம் கிட்ட போய் :- என்ன ----------டா ஓவர் கட் பண்ணின ?


ஸ்ரீராம் :- நாகி சார் தான் ச்பின்னேர் எண்டு மாத்தறதுக்காக உனக்கு பௌலிங் கொடுக்க சொன்னார். அதுனால தான் !!!


மேட்ச் முடியுது. முதல் மேட்ச்லயே தோத்துட்டு திருச்சிக்கு பஸ்.


நாகி :- செந்திலா, வேணு ஹெல்மெட் எடுத்துக்கிட்டு வந்தானே, அத use பண்ணவே இல்ல போல இருக்கு.
வேணு :- டேய் நாகி ! @#@#&%#@ #$@ #% @#' '*&^%$#$#% @#@#&%#@ #$@ ஊருக்கு வந்த உடன இவன் சங்கத்துக்கு லெட்டர் எழுதறான். அவர் கம்ப்ளைன்ட் பண்றார் இவன பத்தி. அப்புறம் என்ன ஆச்சுன்னு ஞாபகம் இல்ல.


(வேணு திருச்சில இருந்த இன்னொரு செலக்டோரட பையன்)

4 comments:

Athisha said...

ஐ ஜாலி அப்போ ஷாவா இருந்தா இன்டியன் டீம்ல இடம் புடிச்சிரலாமா

நான் கூட அதிஷா

என்னையும் சொல்லி சேர்த்து விடுங்களேன்

Athisha said...

அரசியல்னா இதெல்லாம் சாதாரணமப்பா

வாரிசு அரசியல் கிரிக்கெட்ல மட்டுமில்லை என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன் அது எல்லா துறையிலும் அவுத்து போட்டு ஆடுகிறது என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

நவநீதன் said...

அம்பெயர் வாயால் கமெண்டரி கேட்டது போல் இருக்கிறது.

அல்லது

கிரிக்கெட்டர் வாயால் கிரிக்கெட் கேட்பது போல் இருக்கிறது.

இந்த பதிவு சுஜாதா எழுதிய கிரிக்கெட் சம்பந்தமான ஒரு கட்டுரையை எனக்கு நினைவுப்படுத்தியது.

வாழ்த்துக்கள் ....!

மணிகண்டன் said...

நன்றி நவநீதன். (உங்க கவிதை எல்லாம் சூப்பர் )

அமாம் ஆதீஷா. நீங்க கூட ஷா தான் !