Friday, October 17, 2008

மொஹாலி டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம்

1) கம்பீர் நல்ல formல இருக்கும் போது 60 ரன் எடுத்துட்டு அவுட் ஆவறது எரிச்சலா இருக்கு. விரேந்திர சேவாக் மறுபடியும் முப்பது ரன் பழக்கத்த அரம்பிசுட்டாரான்னு தெரியல. போன சீரியஸ்ல மென்டிஸ் / முரளிதரன் பௌலிங் போட வருதுக்கு முன்னாடி பாஸ்டா ரன் அடிக்க வேண்டிய கட்டாயம். இப்ப அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. வைட் மற்றும் வாட்சன் வர மாட்டாங்களான்னு ஒவ்வொரு பேட்ஸ்மேன்னும் ஏங்கறாங்க. அதுக்கு ஜஸ்ட் முன்னாடி அவுட் ஆயிக்கிட்டு போறது கிரிமினல். அடுத்த டெஸ்ட்ல கம்பீர் இல்லாட்டி சேவாக் ஒரு பெரிய ஸ்கோர் பண்ணனும்.

2) சவுரவ் அண்ட் சச்சின் ஏகப்பட்ட ரன் ஓடி எடுத்தது நல்ல strategy. லக்ஸ்மன் மிஸ் பண்ணிட்டாரு.

3) ஆஸ்திரேலிய பௌலிங் பாக்க பாவமா இருக்கு. நிச்சயமா அவங்க ஒரு புல் டைம் ஸ்பின்னர் ட்ரை பண்ணி இருக்கணும். இல்லாட்டி இன்னும் ஒரு ரெகுலர் பாஸ்ட் பவுலர் கொண்டு வந்து இருக்கணும். பாண்டிங் நிலைமை பாவம் தான்.

4) இந்த டெஸ்ட்ல கும்ப்ளே விளையாடமாட்டாருன்னு எதிர்பார்த்தேன். ஆனா அமித் மிஸ்ராவ செலக்ட் பண்ணுவாங்கன்னு நிச்சயமா எதிர்பார்க்கல. ஒருவேளை கும்ப்ளே உண்மையாவே injured தான்னு ப்ரூவ் பண்ண நினைச்சாங்களோ என்னவோ. முநாப் படேல் விளையாடி இருந்தா அது ஒரு strategical முடிவா தான் பாத்து இருப்போம்.

5) அமித் மிஸ்ராவையும் சேத்து இந்த மேட்ச்ல நாலு டெல்லிகாரங்க. போன வருஷம் ரஞ்சி ஜெயிச்சது ஆச்சர்யம் இல்லை. zonal based செலக்ஷன் அப்படின்னு சொல்றது எல்லாம் சும்மா. ஒரு ஜோனுக்கு ஒரு செலக்டர் அப்படிங்கறது logistics சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு தான் தோனுது. ஒரு சமயம் அபே குருவில்லா இந்தியாவுக்கு டெஸ்ட் விளையாடின போது கண்ணுலேந்து ரத்தமா வந்தது என்னமோ உண்மை தான் !

6) டெண்டுல்கர் லாராவ தாண்டினது சூப்பர். மேஜர் distraction கடந்து போனது நல்லது தான். இருவது வருஷமா இந்திய கிரிக்கெட் டீம்ல கிரிக்கெட் விளையாடறது சாதாரண விஷயம் கிடையாது. இந்த ரெகார்ட் விட அது பயங்கர பெரிய achievement. ஹேட்ஸ் ஆப் டு ஹிம்.

7) மேட்ச் நல்ல இன்டரஸ்டிங்கா தான் போய்க்கிட்டு இருந்தது. சச்சின் கொஞ்சம் பேலன்ஸ்டா இருக்கட்டுமேன்னு அவுட் ஆனாரு. அது பத்தாதுன்னு இன்ஷாந்த் ஷர்மாவ இறக்கிவிட்டு டோனி இன்னும் பெரிய காமெடி பண்றாரு.

3 comments:

Samuel | சாமுவேல் said...

he might have done a comedy towards end of day, but sure he will be more effective in his bowling changes and field pacements when Aus bats...just my thought.

மணிகண்டன் said...

Hopefully. If he can do effective field placements and bowling changes, it would be good for the team. Let us see.

Thamira said...

உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மறுக்காமல் கலந்துகொள்ளவும்.

நேரமின்மையால் உங்கள் பதிவு குறித்த கருத்துகளை பின்னர் பகிர்கிறேன். நன்றி.!