சச்சின் விளையாடுவானா இல்லையான்னு மக்கள் கவலபட்டுக்கிட்டு இருக்கும் போது, இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் செய்தி. ஆஸ்திரேலிய டீம் கூட கிரெக் சாப்பெல் வர்றாராம். மெயின் கோச்க்கு ஹெல்ப் செய்யறதுக்கு ! ரிக்கி பாண்டிங் ஒபெநிங், மாத்யூ ஹய்டன் 4th டவுன், பிரட்லிய இடது கைல பௌலிங் போட வைக்கறது - இது மாதிரி பல நாவல்ட்டி ஐடியா எல்லாம் வச்சி இருக்காராம். அது எல்லாத்தையும் இந்திய டெஸ்ட் தொடர்ல முயற்சி பண்ணி பாக்கணும்ன்னு தேடி புடிச்சு ஒவ்வொரு நிருபர்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கறதா தகவல். அவர் இன்னும் இந்தியா வராததுனால எந்த தகவலும் இன்னும் பிரசுரம் ஆகல. 24 ஹவர் நியூஸ் சேனல் எல்லாம் சாப்பெல் சம்பந்தமான செய்தி போட்டா டைம் பத்தாதேன்னு ஒரே கவலையா இருக்காங்களாம்.
அத தவிர ட்ரான்ஷிஷன் ப்ராசெஸ் சம்பந்தமா ஒரு தியரி வச்சி இருக்காராம். அத செயல்படுத்தி பாக்கணும்ன்னு பயங்கர ஆர்வமா இருக்காராம். அத கேட்ட பாண்டிங் சய்மண்ட்ஸ் கூட நம்பளும் பிஷிங் போய் இருக்கலாமோ என்று நொந்து வருவதாக தகவல்.
இத எல்லாம் கேட்டு பயங்கர குஷியான கும்ப்ளே அன் கோ, இந்திய டீம்ல சுஜித் சோமசுந்தர சேத்து அலன் டோனால்ட terrorize பண்ணினா மாதிரி எதாவது ஒரு சர்ப்ரைஸ் கவுண்டர் பஞ்ச் கொடுக்கலாம் என்று யோசித்து வருவதாகவும் தகவல்
நன்றி MSN.
Tuesday, September 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
;-)))
உங்கள் வருகைக்கு நன்றி ஆதிஷா.
தலைப்பை மாற்றி விட்டு கிரிக்கெட் சம்பந்தமாக தொடர்ந்து எழுதலாமே...
வலையுலகில் எனக்கு தெரிந்து கிரிக்கெட்-க்கு வலைப் பதிவர்கள் ரொம்ப குறைவு...
:-)
will try if i still write after a month !!!
Post a Comment