Wednesday, October 1, 2008

ஹர்பஜன் சிங்க் Vs ரிக்கி பாண்டிங்

இந்த தொடர்ல ரொம்ப எதிர்பார்க்கபடற tussle ஹர்பஜன் சிங்கோட பவுலிங்க ரிக்கி பாண்டிங் எப்படி விளையாடுவாருன்னு தான்.


ஒரு பத்து பன்னண்டு வருஷம் முன்னாடி ஆஸ்திரேலியாவோட அப்கமிங் பேட்ஸ்மேனா கிரேக் ப்ளுவெட் (Greg Blewett !) இருந்தாரு. இவரோட strokes எல்லாம் பாக்கறதுக்கு பயங்கர ஸ்டைலிஷா இருக்கும் . ஆனா பாவம் MUSHTAQ AHMED போடற கூக்லிய சுத்தமா பிக் பண்ண தெரியாம தெனருவாறு. பேட்ட தூக்கிகிட்டு கால வச்சி குச்சிய மறைச்சிகிட்டு கும்மி அடிப்பாரு. ஆனா பந்து நேரா போய் குச்சிய பேத்துடும்.


ஒரு மேட்ச்ல லுஞ்சுக்கு ஒரு ஓவர் இருக்கும். Blewett Batting. உடனே முஷ்ட்டாக் பந்த தூக்கிட்டு வருவாரு. (பவுலர் எல்லாருமே ப்ரீயா கிடைச்சா பினாயில் குடிக்கற கூட்டம்.)


பஸ்ட் பால் - blewett கூக்லி எதிர்பார்த்து விளையாடுவாரு. ஆனா proper leg break வரும். எப்படியோ சமாளிச்சுடுவாரு.


செகண்ட் பால் - கூக்லி தான் - இதோட கோவிந்தானு Blewettoda புட் வொர்க் இருக்கும். ஆனா again proper leg break.


மூணாவது பால் - நீ என்னடா நாயே கூக்லி போடறதுன்னு லெக் பிரேக்லயே ஸ்லிப் கேட்ச் கொடுத்து பன்னு சாப்பிட எல்லாரையும் அழைச்சிகிட்டு பெவிலியன் போய்டுவாரு.


அந்த சீரியஸ் முடிஞ்ச உடன அவருக்கு பதிலா தான் ரிக்கி பாண்டிங் டீமுக்கு வந்தாரு.


பெங்களூர்ல பாண்டிங் செட் தோசா சாப்பிட எல்லாரையும் அழைச்சிக்கிட்டு பெவிலியன் திரும்புவாரா ? (இல்லாட்டி ஏற்கனவே 2001ல ப்ரீ லஞ்ச் நெறைய கொடுத்துட்டேன்னு விட்டுடுவாரா) .

அக்டோபர் ஒம்பதாம் தேதியோ இல்லாட்டி பத்தாம் தேதியோ பதில் தெரியும். பாக்கலாம்.

Tuesday, September 30, 2008

ஜெயதேவ் ஷா - இந்திய/திருச்சி கிரிக்கெட் சங்க அரசியல்

இஸ்ரேலுக்கு போன இந்திய அணிக்கு தலைவனா போய் ஜெயிச்சுட்டு வந்துருக்காரு. போன வருஷம் சௌராஷ்ட்ர அணிக்கு தலைவனா இருந்து ரஞ்சி ஒன் டே போட்டில சாம்பியன்ஷிப் ஜெயிச்சு இருக்காரு. ரொம்ப அருமையா அணிய கையாண்டார்ன்னு பெரிய பெரிய பருப்பு எல்லாம் பாராட்டி இருக்காங்க. கடந்த ஆறு வருஷத்துல பஸ்ட் கிளாஸ் போட்டிகள ரெண்டு முறை செஞ்சுரி அடிச்சி இருக்காரு. 10 விக்கெட் எடுத்து இருக்காரு. (ஒரே மேட்ச்ல இல்ல - 37 மேட்ச்ல).


இவை அத்தனையும் மனசுல கொண்டு இந்திய A அணிக்கு உதவி தலைவனா நியமிக்கப்பட்டு இருக்காரு. அவருக்கு நம்பளோட வாழ்த்துக்கள சொல்லுவோம்.


(ஜெயதேவ் ஷா - நிரஞ்சன் ஷாவோட பையன் )


94 ன்னு நினைக்கறேன். திருச்சில நடக்கிற கிரிக்கெட் மேட்ச் எல்லாம் நான் பாத்துகிட்டு இருந்த காலம். அப்பதான் நான் அம்பயர் பரீட்சை பாஸ் பண்ணி இருந்தேன். அதுனால சங்கத்துல உள்ள மக்கள் எல்லாம் நல்ல பரிச்சயம். அத தவிர நம்ப நண்பர்கள் எல்லாம் திருச்சி அண்டர் 19 கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. திருச்சியோட கோச் நாகின்னு ஒருத்தரு.(செலக்டரும் கூட ) கேப்டன் ஸ்ரீராம். நல்லா பேட் பண்ணுவான். அத தவிர நாகி சொல்றத செய்வான். அந்த வருஷம் போட்டிக்கு கோயம்புத்தூர் போனாங்க. திருச்சிக்கு ஒரு இடது கை ச்பின்னர், ஒரு ரெண்டு பூச்சி பாஸ்ட் பவுலர். அத தவிர, வேணுன்னு ஒரு நல்ல வேகமா ஓடி வந்து கைய சுத்தி/சுத்தி போடற ஒரு பாஸ்ட் பவுலர். இவனுங்க மாட்ச்ல விக்கெட் எடுக்கரத பத்தி நான் பேசி பாத்ததே கிடையாது. எவ்வளவு அல்வா கொடுத்தோம்ன்னு தான் கவுண்டு பண்ணுவாங்க. ( அல்வா - பேட்ஸ்மண் மூஞ்சிலயோ உடம்புலயோ ரத்தம் பாக்குறது.). அந்த வருஷம் திருச்சி லீக்ல ஒரு 35 விக்கெட் எடுத்து இருந்ததுனால அவன் தான் ஸ்டிரைக் பவுலர். எல்லாரும் பஸ்ல கோயம்புத்தூர் போய்கிட்டு இருக்கும் போது


நாகி :- ஏண்டா செந்திலா, வேணு எதுக்குடா ஹெல்மெட் எடுத்துக்கிட்டு வரான் ?

செந்தில் :- இல்ல சார். அவன் பௌலிங் போடற போது, shortleg பீல்டருக்கு.

நாகி :- ஓஹோ அப்படியா.


டாஸ் தோத்து போய்டாங்கன்னு நினைக்கறேன். கோயம்புத்தூர் பேட்டிங். வேணு ஹெட் பேண்ட் எல்லாம் போட்டுக்கிட்டு பௌலிங் ஸ்டெப்ஸ் மார்க் பண்ணிக்கிட்டு இருக்கான்.


ஆனா பஸ்ட் ஓவர் செந்தில். அந்த ஓவர் முடிஞ்சவுடன நாகிகிட்டேந்து ஸ்ரீராமுக்கு அழைப்பு. அடுத்த ஓவர் மரியராஸ். அதுக்க அடுத்த ஓவர் செந்தில் .........


ஒன் கட் பௌலிங் இடது கை ஸ்பின்னர். போட போட சாத்து விழுது.
ட்ரிங்க்ஸ் வருது. நாகி வேணுவ பாத்து ஒரு நக்கல் சிரிப்பு.

ட்ரிங்க்ஸ் முடிஞ்ச உடன, திருப்பி அதே பவுலர். மறுபடியும் சாத்து.


மேட்ச் 45 ஓவர்ஸ் தான். 41 ஆவது ஓவர் வருது. கோயம்புத்தூர்ல ஒரு பேட்ஸ்மண் 95 ரன் எடுத்து விளையாடிகிட்டு இருக்கான். ஸ்ரீராம் வேணு கிட்ட பந்த கொடுக்கறான். 40 ஓவர்ஸ் கழிச்சி மறுபடியும் பவுண்டரி பக்கத்துல போய் ஸ்டெப்ஸ் மார்க் பண்றான். அடியோ அடின்னு அடிச்சு இருக்கறதுனால நோ க்ளோஸ் பீல்டர்ஸ். டீசண்டா போடறான். நாலு பால்ல ஒரே ஒரு ரன் தான். 95 ரன் எடுத்த பேட்ஸ்மண் அஞ்சாவது பால்ல அவுட்.


அடுத்த ஓவர் மரியராஸ். ஓவர் முடிஞ்சவுடன பந்த எடுத்துக்கிட்டு வேணு வரான். நாகிகிட்டேந்து ஸ்ரீராமுக்கு மறுபடியும் அழைப்பு. வேணுகிட்டேந்து பந்த வாங்கி இடது கை ஸ்பின்னர் கிட்ட கொடுக்கறான். மறுபடியும் சாத்து. இன்னிங்க்ஸ் முடியுது.


வேணு ஸ்ரீராம் கிட்ட போய் :- என்ன ----------டா ஓவர் கட் பண்ணின ?


ஸ்ரீராம் :- நாகி சார் தான் ச்பின்னேர் எண்டு மாத்தறதுக்காக உனக்கு பௌலிங் கொடுக்க சொன்னார். அதுனால தான் !!!


மேட்ச் முடியுது. முதல் மேட்ச்லயே தோத்துட்டு திருச்சிக்கு பஸ்.


நாகி :- செந்திலா, வேணு ஹெல்மெட் எடுத்துக்கிட்டு வந்தானே, அத use பண்ணவே இல்ல போல இருக்கு.
வேணு :- டேய் நாகி ! @#@#&%#@ #$@ #% @#' '*&^%$#$#% @#@#&%#@ #$@ ஊருக்கு வந்த உடன இவன் சங்கத்துக்கு லெட்டர் எழுதறான். அவர் கம்ப்ளைன்ட் பண்றார் இவன பத்தி. அப்புறம் என்ன ஆச்சுன்னு ஞாபகம் இல்ல.


(வேணு திருச்சில இருந்த இன்னொரு செலக்டோரட பையன்)

Friday, September 26, 2008

டெண்டுல்கர் பிட் ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்கு

76 ரன்களை எடுத்தால் லாராவோட சாதனையை முறியடிக்கலாம். பெங்களூர் டெஸ்ட் முதல்நாள் அன்னைக்கு அடிப்பாரா ?

டெண்டுல்கர் பிட் ஆகமால் இருந்து இருந்தால், சவுரவ்க்கு சான்ஸ் இருந்து இருக்கும். இப்போ அவர தூக்கர செயல நம்பாளு ஸ்ரீகாந்த் பண்ணனும். பாக்கலாம் என்ன பண்றாருன்னு ?

முதல் மேட்சுக்கு என்னோட 12 பேர் கொண்ட டீம் :- அணில் கும்ப்ளே, சர்தார், இன்ஷாந்த், ஜாகீர், தோனி, வீரு, சவுரவ், ராகுல், சச்சின், லக்ஸ்மன், கம்பீர்.

இந்த தொடர் முடியறதுக்கு முன்னாடி ரோஹித் ஷர்மா, ராயினா ரெண்டு பேருக்கும் ஒரு மேட்ச்லயாவது சான்ஸ் கொடுக்கனும். பாக்கலாம்.
ஒரு மேட்ச் கூட ஆஸ்திரேலியாவ ஜெயிக்க விடாம அனுப்பினா சூப்பரா இருக்கும். பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

Tuesday, September 23, 2008

ஆஸ்திரேலிய அணியுடன் கிரெக் சாப்பெல்

சச்சின் விளையாடுவானா இல்லையான்னு மக்கள் கவலபட்டுக்கிட்டு இருக்கும் போது, இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் செய்தி. ஆஸ்திரேலிய டீம் கூட கிரெக் சாப்பெல் வர்றாராம். மெயின் கோச்க்கு ஹெல்ப் செய்யறதுக்கு ! ரிக்கி பாண்டிங் ஒபெநிங், மாத்யூ ஹய்டன் 4th டவுன், பிரட்லிய இடது கைல பௌலிங் போட வைக்கறது - இது மாதிரி பல நாவல்ட்டி ஐடியா எல்லாம் வச்சி இருக்காராம். அது எல்லாத்தையும் இந்திய டெஸ்ட் தொடர்ல முயற்சி பண்ணி பாக்கணும்ன்னு தேடி புடிச்சு ஒவ்வொரு நிருபர்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கறதா தகவல். அவர் இன்னும் இந்தியா வராததுனால எந்த தகவலும் இன்னும் பிரசுரம் ஆகல. 24 ஹவர் நியூஸ் சேனல் எல்லாம் சாப்பெல் சம்பந்தமான செய்தி போட்டா டைம் பத்தாதேன்னு ஒரே கவலையா இருக்காங்களாம்.

அத தவிர ட்ரான்ஷிஷன் ப்ராசெஸ் சம்பந்தமா ஒரு தியரி வச்சி இருக்காராம். அத செயல்படுத்தி பாக்கணும்ன்னு பயங்கர ஆர்வமா இருக்காராம். அத கேட்ட பாண்டிங் சய்மண்ட்ஸ் கூட நம்பளும் பிஷிங் போய் இருக்கலாமோ என்று நொந்து வருவதாக தகவல்.

இத எல்லாம் கேட்டு பயங்கர குஷியான கும்ப்ளே அன் கோ, இந்திய டீம்ல சுஜித் சோமசுந்தர சேத்து அலன் டோனால்ட terrorize பண்ணினா மாதிரி எதாவது ஒரு சர்ப்ரைஸ் கவுண்டர் பஞ்ச் கொடுக்கலாம் என்று யோசித்து வருவதாகவும் தகவல்

நன்றி MSN.