Wednesday, July 15, 2009
Statistics do lie
Tests
Bowling Averages
Mat Inns Wkts BBI BBM Ave Eco SR 4W 5W
76 131 219 5/58 8/156 32.51 2.96 32.51 11 2
Ashes தொடரின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் Andrew Flintoff அறிவித்துள்ளார்.
இவர் 5 செஞ்சுரிகள் உட்பட கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களில் இங்கிலாந்துக்காக விளையாடிய பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர். 2005 இல் நடந்த ashes தொடரில் இவரது பந்துவீச்சு மறக்கமுடியாதது.
இவரைக் குறித்து மைக் சில்வீ எழுதிய
Statistics and Bikinis Concealing as much as revealing
Wednesday, November 12, 2008
இந்தியா 2 - ஆஸ்திரேலியா 0
அணில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி ரெண்டு பேருக்கும் இந்த சீரியஸ் ஒரு fitting finale. கடைசி ரெண்டு ஓவர் சவுரவ கேப்டன் பண்ண சொன்னது ஒரு நல்ல gesture. அவங்கள ரீப்ளேஸ் பண்ண நல்ல ப்ளேயர்ஸ் வந்து இருக்காங்க. கம்பேர் பண்ணாம அவங்கள வளரவிடனும்.
இந்த சீரியஸ் முழுக்க ஆஸ்திரேலியாவோட ஓவர் ரேட் பயங்கர மோசம். அத கடைசி செசண்ல மட்டும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி பண்ணினது லூசுத்தனம். அத தவிர பாண்டிங் கேப்டன்சி ஒன்னும் பயங்கர மோசம் கிடையாது. இந்த டீம மார்க் டெய்லர் லீட் பண்ணி இருந்தாலும் இதே கருமாந்திர ரிசல்ட் தான் வந்து இருக்கும்.
கிரேக் வைட் மாதிரி ஒரு பிளேயர் தொடர்ந்து நாலு டெஸ்ட் மேட்ச் ஒரு டாப் டீமுக்கு விளையாடறது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டுக்கு பயங்கர ஆபத்தானது. (IPL ICLல விட). ஆஸ்திரேலிய டீம் மானஜ்மேண்டுக்கு மண்டை குழம்பிடிச்சி போல.
Monday, October 27, 2008
டெல்லி டெஸ்ட் - ஒரு முன்னோட்டம்
ஆஸ்திரேலியா நிச்சயமாக ஒரு நல்ல சுழல்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். மாத்யூ ஹய்டேன் சென்ற டெஸ்ட்டில் திடீர் என்று அடித்து விளையாடியது ஜாகிர்கானை கவுண்டர் செய்ய கையாளப்பட்ட முறைன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காரு. அதே மாதிரியே திருப்பியும் விளையாடனும்ன்னு வேண்டுவோம்.
இந்திய பிட்ச்ல முதல் ரெண்டு நாளைக்கு தான் ஸ்பின்னர்ஸ் அருமையா போடறாங்க. பிட்சும் ஹெல்ப் பண்ணும். அதுக்கு அப்புறம் ரொம்ப பிட்ச் ரொம்ப மெதுவா ஆயிடும். சோ, டாஸ் ரொம்ப பெரிய ரோல் எல்லாம் ப்லே பண்ணாது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், நாக்பூர் மற்றும் ஒரு மும்பை ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் (கிறிஸ்துமஸ் பண்டிகை அவர்கள் ஊரில் கொண்டாட) விளையாடுவதை நிராகரித்து இருக்கிறது.
Tuesday, October 21, 2008
மொஹாலி டெஸ்ட்
1) ஒரு அஞ்சி பேருக்காவது மேன் ஆப் த மேட்ச் கொடுத்து இருக்க முடியும்.
2) சச்சின் - சவுரவ் ஸ்டாண்ட் தான் மேட்சோட டர்னிங் பாயிண்ட்.
3) எனக்கு ரொம்ப பிடிச்ச டிச்மிசல் அமீத் மிஸ்ரா கிளார்க்க அவுட் பண்ணினது. சுத்தமா எதிர்பார்க்காத பந்து !
4) டோனி ரொம்ப நாள் கழிச்சி டெஸ்ட் மேட்ச்ல பேட்டிங் நல்லா விளையாடி இருக்காரு. பவுலிங் மாற்றம் நல்லா பண்ணினாரு. குட் கேப்டன் இன் த மேக்கிங். ஒன் பவுன்ஸ் கேட்ச் அப்பீல் பண்ணினது கொடுமை.
5) ஆஸ்திரேலியா பேட்டிங் இம்ப்ரூவ் பண்ணிடுவாங்க. ஆனா இந்த பவுலிங்க வச்சிக்கிட்டு மேட்ச் ஜயிக்கரத்துக்கு நம்ப பேட்ஸ்மண் ரொம்பவே ஒத்துழைக்கனும்.
6) டெல்லி டெஸ்ட் மட்சுக்கு அணில் கும்ப்ளே பிட்டா இருந்த மிஸ்ராவுக்கு பதிலா விளையாடுவாரு. அது ஒண்ணும் தப்பான முடிவுன்னு சொல்லமாட்டேன். (லக்ஸ்மனுக்கு பதிலா விளையாடறது முட்டாள்தனம்.) மிஸ்ரா ரொம்ப நல்லா பவுலிங் போட்டாரு. அவருக்கு சான்ஸ் இங்கிலாந்து சீரியஸ்ல கிடைக்கும்.
7) டெல்லி டெஸ்ட் மேட்ச்ல இந்தியா ஜெயிச்சா கும்ப்ளே, சச்சின், டிராவிட் மூணு பேரும் நாக்பூர் மேட்ச்ல ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாம்.
8) பந்து கண்ணாபின்னானு ஸ்பின் ஆகும் போது நான் ரொம்பவே மிஸ் பண்ணினது மோங்கியா விக்கெட் கீபிங்க. என்னைய பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்ல பெஸ்ட் ஜோடி மோங்கியா - அணில் கும்ப்ளே தான். (90 ல இந்தியாவுல நடந்த டெஸ்ட் மேட்ச் பாத்தவங்க நிச்சயமா என்ஜாய் பண்ணி இருப்பாங்க. ) இந்த மேட்ச் பத்தி அருமையான satire படிக்க ஆசைப்பட்டா
Friday, October 17, 2008
மொஹாலி டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம்
2) சவுரவ் அண்ட் சச்சின் ஏகப்பட்ட ரன் ஓடி எடுத்தது நல்ல strategy. லக்ஸ்மன் மிஸ் பண்ணிட்டாரு.
3) ஆஸ்திரேலிய பௌலிங் பாக்க பாவமா இருக்கு. நிச்சயமா அவங்க ஒரு புல் டைம் ஸ்பின்னர் ட்ரை பண்ணி இருக்கணும். இல்லாட்டி இன்னும் ஒரு ரெகுலர் பாஸ்ட் பவுலர் கொண்டு வந்து இருக்கணும். பாண்டிங் நிலைமை பாவம் தான்.
4) இந்த டெஸ்ட்ல கும்ப்ளே விளையாடமாட்டாருன்னு எதிர்பார்த்தேன். ஆனா அமித் மிஸ்ராவ செலக்ட் பண்ணுவாங்கன்னு நிச்சயமா எதிர்பார்க்கல. ஒருவேளை கும்ப்ளே உண்மையாவே injured தான்னு ப்ரூவ் பண்ண நினைச்சாங்களோ என்னவோ. முநாப் படேல் விளையாடி இருந்தா அது ஒரு strategical முடிவா தான் பாத்து இருப்போம்.
5) அமித் மிஸ்ராவையும் சேத்து இந்த மேட்ச்ல நாலு டெல்லிகாரங்க. போன வருஷம் ரஞ்சி ஜெயிச்சது ஆச்சர்யம் இல்லை. zonal based செலக்ஷன் அப்படின்னு சொல்றது எல்லாம் சும்மா. ஒரு ஜோனுக்கு ஒரு செலக்டர் அப்படிங்கறது logistics சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு தான் தோனுது. ஒரு சமயம் அபே குருவில்லா இந்தியாவுக்கு டெஸ்ட் விளையாடின போது கண்ணுலேந்து ரத்தமா வந்தது என்னமோ உண்மை தான் !
6) டெண்டுல்கர் லாராவ தாண்டினது சூப்பர். மேஜர் distraction கடந்து போனது நல்லது தான். இருவது வருஷமா இந்திய கிரிக்கெட் டீம்ல கிரிக்கெட் விளையாடறது சாதாரண விஷயம் கிடையாது. இந்த ரெகார்ட் விட அது பயங்கர பெரிய achievement. ஹேட்ஸ் ஆப் டு ஹிம்.
7) மேட்ச் நல்ல இன்டரஸ்டிங்கா தான் போய்க்கிட்டு இருந்தது. சச்சின் கொஞ்சம் பேலன்ஸ்டா இருக்கட்டுமேன்னு அவுட் ஆனாரு. அது பத்தாதுன்னு இன்ஷாந்த் ஷர்மாவ இறக்கிவிட்டு டோனி இன்னும் பெரிய காமெடி பண்றாரு.
Monday, October 13, 2008
முதல் டெஸ்ட் முடிவு - அட்வான்டேஜ் இந்தியா
BCCI எதுக்கு முதல் மேட்ச் பெங்களூர்ல, இரண்டாவது மேட்ச் மொகாலில schedule பண்ணினாங்கன்னு தெரியல. கொல்கத்தா, சென்னை ரெண்டுலயும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா இந்தியாவுக்கு அட்வான்டேஜ் ஜாஸ்தி. ஆனா மேட்ச் இல்ல.
இந்த சீரியஸ் அரம்பிக்கரதுக்கு முன்னாடியே நான் இந்தியா டெல்லில, ஆஸ்திரேலியா பெங்களூர்ல நிச்சயம் ஜயிச்சுடுவாங்கன்னு நினைச்சேன். பட் நம்ப ஆளுங்க பெங்களூர்ல ட்ரா பண்ணிட்டாங்க. so, என்னைய பொறுத்தவரைக்கும் அட்வாண்டஜ் இந்தியா தான்.
ஆஸ்திரேலியா 1-0 ன்னு இருந்து இருக்கணும். ஆனா அவங்க ஏன் இந்த அளவுக்கு defensive அப்ரோச்ன்னு எனக்கு புரியல. அதுவும் பேட்டிங்ல ! ஹய்டேன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருந்தா வித்தியாசமா இருந்து இருக்கும். ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்ஸ் இன்னும் நல்லா போடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஏன்னா அவங்க கிட்ட ஒரு நல்ல ஸ்பின்னர் கூட இல்ல. இத விட பெட்டரா போடாட்டி அவங்க இந்த சீரியஸ்ல ஒரு மேட்ச் ஜெயிக்கறது கூட ரொம்ப கஷ்டம்.
எந்த ஒரு தொடர்லயும் இந்தியா கொஞ்சம் மெதுவா தான் அரம்பிக்கறாங்க. ஆனாலும் மிடில் ஆர்டர் இந்த அளவுக்கு கொடுமையா விளையாடறது எரிச்சலா இருக்கு. (எல்லாருக்கும் கொஞ்ச நேரமாவது மேட்ச் ப்ராக்டிஸ் கிடைச்சி இருக்கு) அத தவிர டோனியும் திராபையா விளையாடறாரு. பட் இந்திய டீம் inconsistent அப்படிங்கறது ஒரு புது செய்தி கிடையாது. அதுனால, பேட்ஸ்மேன் நிச்சயமா அடுத்த ரெண்டு மூணு மேட்ச்ல ஒரு மேட்ச் டாமினேட் பண்ணுவாங்க. ஆனா, இந்த சீரியஸ் முடியறதுக்குள்ள பத்ரிநாத், ரோஹித் ஷர்மாவுக்கு சான்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும். முநாப் படேலுக்கும் சான்ஸ் கொடுக்கணும். பாக்கலாம்.
(ஒரு மேட்ச் முடிஞ்ச உடன அதுக்கு one-sided + reasonable கண்ணோட்டம் கொடுக்கிறது எப்படின்னு முயற்சி பண்ணி பாத்தேன்.)
Thursday, October 2, 2008
ரிக்கி பாண்டிங்கின் கேட்ச் ஒப்பந்தம்
contentious காட்ச்ல Fielder சொல்றத கேட்டுட்டு பேட்ஸ்மேன் பெவிலியன் போயடனும்ன்னு அப்படிங்கறது தான் இந்த ஒப்பந்தத்தோட சாராம்சம். கீழ உள்ள படத்த பாருங்க. சிட்னீல நடந்த மேட்ச்ல பாண்டிங் கேட்ச் புடிச்சு கிளைம் பண்ணின லட்சணம். நம்ப ஆளுங்களும் ஒன்னும் லேசு பட்டவனுங்க இல்ல.
இது எல்லாம் பாக்கரதுக்கு தான் அம்பயர் நிக்கறான். (Rudi koertzen கிட்ட யாராவது ஞாபகப்படுத்தனும்). இந்த மாதிரி காட்சுக்கு 3rd அம்பயர் கூப்பிடரத பத்தி வேணும்னா ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம். அத விட்டுட்டு !
எனக்கு ரொம்ப புடிச்ச விக்கெட் கீப்பர் லதீப். அவன் one pitch கேட்ச் கிளைம் பண்ணினானு 5 மேட்ச் ban பண்ணினாங்க. (அதோட அவன் career முடிஞ்சு போச்சு ) Ban பண்ணின மேட்ச் ரெபிரீ மைக் ப்ராக்டேர். அவரே தான் சிட்னி மேட்ச்ளையும் refree. ஆனா இந்த சீரியஸ்க்கு refree பிராடு (fraud இல்ல Broad)