முதல்முறையா, நான் கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சதுக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியாவ ஒரு மேட்ச் கூட ஜெயிக்கவிடாம சீரியஸ் ஜெயிச்சி இருக்கு. எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி, ஆடுதளம் ஒன்னும் ரொம்ப ஸ்பின்னர் பிரன்ட்லியா இல்லை. இந்தியாவோட பவுலிங் அட்டாக் ரொம்ப balanced. ஆஸ்திரேலியாவோட பவுலிங் மகா மோசம். ரெகுலர் ஸ்பின்னர் எல்லா போட்டிலயும் விளையாடி இருந்தா ரொம்ப நல்லா இருந்து இருக்கும். ஆனாலும் தொடர் ரிசல்ட் ஒன்னும் மாறி இருக்காது. இந்தியா பேட்ஸ்மேன் எல்லா மேட்ச்லயும் ரொம்ப நல்லா விளையாடி பவுலர்ச்க்கு ஒரு சான்ஸ் கொடுத்தாங்க. எல்லா பேட்ஸ்மேனும் ரன் எடுத்தாங்க. (டிராவிட் தவிர). ஹர்பாஜன் சிங்க் பெங்களூர், நாக்பூர் ரெண்டுலயும் பேட்டிங் கலக்கலா விளையாடினாரு. (சீரியஸ் ரிசல்ட் மாறி இருக்கலாம்). கடைசியா ஆஸ்திரேலியாவோட நாலு அரைசதம் அடிச்சி இருக்காரு. பவுலிங்கும் ரொம்ப அருமையா போட்டாரு (போன சீரியஸ்ல வார்னே போட்ட மாதிரி). இந்தியாவுக்கு பயங்கரமான பாசிடிவ் :- அமித் மிஸ்ரா, கவுதம் கம்பீர்.
அணில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி ரெண்டு பேருக்கும் இந்த சீரியஸ் ஒரு fitting finale. கடைசி ரெண்டு ஓவர் சவுரவ கேப்டன் பண்ண சொன்னது ஒரு நல்ல gesture. அவங்கள ரீப்ளேஸ் பண்ண நல்ல ப்ளேயர்ஸ் வந்து இருக்காங்க. கம்பேர் பண்ணாம அவங்கள வளரவிடனும்.
இந்த சீரியஸ் முழுக்க ஆஸ்திரேலியாவோட ஓவர் ரேட் பயங்கர மோசம். அத கடைசி செசண்ல மட்டும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி பண்ணினது லூசுத்தனம். அத தவிர பாண்டிங் கேப்டன்சி ஒன்னும் பயங்கர மோசம் கிடையாது. இந்த டீம மார்க் டெய்லர் லீட் பண்ணி இருந்தாலும் இதே கருமாந்திர ரிசல்ட் தான் வந்து இருக்கும்.
கிரேக் வைட் மாதிரி ஒரு பிளேயர் தொடர்ந்து நாலு டெஸ்ட் மேட்ச் ஒரு டாப் டீமுக்கு விளையாடறது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டுக்கு பயங்கர ஆபத்தானது. (IPL ICLல விட). ஆஸ்திரேலிய டீம் மானஜ்மேண்டுக்கு மண்டை குழம்பிடிச்சி போல.
Wednesday, November 12, 2008
Subscribe to:
Posts (Atom)